×

தோனியை இயக்கிய விக்னேஷ் சிவன்... புகைப்படங்கள் வைரல்...

 

விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு மூவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் தோனியுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில்தான் இதன் ஷூட்டிங் முடிந்துள்ளது.