×

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் பட பூஜை நிறைவு... புகைப்படங்கள் வைரல்... 

 

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.