×

கைநழுவிப்போன அடுத்த படம்! - அடிமேல்அடிவாங்கும் ‘விக்னேஷ் சிவன்’ என்ன நடந்தது.

 

இயக்குநர் விக்னேஷ் சிவனிற்கு இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக இல்லை, நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்திலிருந்து விக்னேஷ் நீக்கப்பட்ட நிலையில். அடுத்து ஒரு படமும் கைநழுவிபோய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்படதால் கடும் அப்செட்டில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு LIC  என் பெயரிட்டுள்ளதாவும், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அவர் கைவசம் இருந்து மற்றுமொரு திரைப்படம் கைநழுவி சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது

அதாவது நடிகர் கவின் நடிப்பில் தயாராக இருந்தஊர்குருவிபடத்தை அருண் இயக்க, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த  திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும். இப்படத்தின் ஹீரோவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறாராம் இயக்குனர் அருண்தொடர்ந்து ஏன் இந்த படம் ரௌடி பிக்சர்ஸின் கைநழுவி போனது என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.