×

”நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. படம் பிடிக்காதவர்கள் சொன்ன கருத்தையும் நோட் பண்ணிக்கிட்டேன்” – விக்னேஷ் சிவன் ட்வீட்

ஆவணக் கொலைகளை மையப்படுத்தி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். அனைத்து படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்றணும்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் அஞ்சலி, கல்கி கேக்லா, பதம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆவணக் கொலையை மையப்படுத்தி அழுத்தமாக
 

ஆவணக் கொலைகளை மையப்படுத்தி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். அனைத்து படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்றணும்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் அஞ்சலி, கல்கி கேக்லா, பதம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆவணக் கொலையை மையப்படுத்தி அழுத்தமாக இருக்கும் இந்தக் கதையையும், விக்னேஷ் சிவன் தனது பாணியில் இயக்கி அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், ‘லவ் பண்ணா உட்றணும்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தும் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அதில், “இந்தக் கதாபாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்துக் கொடுத்த அஞ்சலி மற்றும் கல்கி கேக்லாவுக்கு மிக்க நன்றி. பத்மகுமார், ஜாஃபர், டோனி மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், பாராட்டுகள் மற்றும் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு உண்மையிலேயே மிக சிறந்த அனுபவமாக இருந்தது.

எனது ‘லவ் பண்ணா உட்றணும்’ படத்தை விரும்பிய அனைவருக்கும் நன்றி. உங்கள் பார்வை, கருத்துகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. படத்தை விரும்பாதவர்கள் சொன்ன விஷயங்களை நான் கருத்தில் கொண்டுள்ளேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக எடுப்பதை உறுதி செய்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாவக் கதைகளுக்கு தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி”.என்று குறிப்பிட்டுள்ளார்.