×

விஜய் 65 படத்தில் ஹீரோயின் இவரா ?… கோடிகளில் சம்பளம் கேட்பதால் இழுபறி… Thalapathy 65

தளபதி 65-யில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்பது முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் 65வது படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, குத் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். ஏப்ரலில் தொடங்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக ரஷ்யாவில்
 

தளபதி 65-யில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்பது முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் 65வது படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, குத் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஏப்ரலில் தொடங்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இதற்காக விஜய் உள்ளிட்ட குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளனர். ஒரு வாரம் ரஷ்யாவில் ஷூட்டிங், பின்பு சென்னையில் நடக்கவிருக்கிறதாம். 60 நாட்களில் படத்தின் ஷூட்டிங் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அரசியலை படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் அரசிவாதியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் முடிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா என இரண்டு ஹீரோயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக பூஜா ஹெக்டேவிடம் சன் பிக்சர்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க 3.5கோடி ரூபாய் சம்பளம் பூஜா ஹெக்டே கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் தொடங்க இன்னும் ஒரு மாத உள்ள நிலையில் விரைவில் ஹீரோயின் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.