×

ஹெச்.வினோத் - விஜய் இணையும் ‘விஜய் 69’ படப்பிடிப்பு தொடக்கம் 

 

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா ஃபைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமூகப் பிரச்சனைகளை கமர்ஷியலான திரைக்கதையுடன் விறுவிறுப்பாக கூறுவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் எச்.வினோத்.

null


இவரது இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் விஜய்யின் அரசியல் பயணத்தை சார்ந்து இருக்குமா அல்லது எச்.வினோத் ஸ்டைலில் இருக்குமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

தளபதி 69 படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணிபுரிகிறார். மேலும் படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ், சண்டை பயிற்சியாளராக அனல் அரசு, கலை இயக்குநராக செல்வக் குமார், ஆடை வடிவமைப்பாளராக பல்லவி ஆகியோர் பணிபுரிகின்றனர்.