×

மம்மூட்டியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி... புதிய படத்தின் முக்கிய அப்டேட் !

 

மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவின் வியக்கத்தக்க நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி, தென்னிந்தியாவில் முக்கிய நடிகராக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகும் 'மைக்கேல்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனரான மணிகண்டன் இயக்கவுள்ளார். 'காக்காமுட்டை' படத்தின் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த படத்திற்கு பிறகு குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அதோடு மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல்முறையாக மம்மூட்டியும், விஜய் சேதுபதியும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி இணையதளத்திற்காக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.