×

'வாரிசு' படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

விஜய்யின் 'வாரிசு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

விஜய் மற்றும் வம்ஷி படைப்பள்ளி கூட்டணி உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. 

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று  இப்படத்தை தயாரித்து வரும் வெங்கடேஸ்வரா நிறுவனம் தெலுங்கில் வெளியிடவுள்ளது. ஆனால் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.