×

'தளபதி 68'- க்கு மாஸான தலைப்பு ?..  விசிலடிக்க தயாராகும் ரசிகர்கள் !

 

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

 தளபதி விஜய் ‌‌‌திரைப்படம் என்றாலே அது எதிர்பார்ப்பை ஏற்படும். அப்படி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு உச்சபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் இந்த படத்தின் பிசினஸ் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. 

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை விரைவில் நடிகர் விஜய் முடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. 

 இந்நிலையில் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு 'சிஎஸ்கே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தல தோனியின் தீவிர ரசிகர்கள் என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படம் கிரிக்கெட் தொடர்பான கதைக்களம் கொண்ட படமாக இருக்கலாம் என்றும், குறிப்பாக சென்னை கிரிக்கெட் கதைக்களமாக இருக்கும் என தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.