☰
×

செருப்பு அணியாமல் செல்லும் விஜய் ஆண்டனி -ஏன் தெரியுமா ?

 

விஜய் ஆண்டனி தயாரித்து, அவரது நடிப்பில் அடுத்து ‘அப்பா குட்டி’ என்ற படம் திரைக்கு வருகிறது. மு.மாறன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஏன் தற்போது செருப்பு அணியாமல் எல்லா இடங்களுக்கும் செல்கிறார் என்கிற காரணத்தை ‘அப்பா குட்டி’ பட விழாவில் அவரது மனைவி பாத்திமா ஆண்டனி தெரிவித்து இருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன் இறந்த அவரது மகள் மீராதான் அதற்கு காரணம். ‘‘மூத்த மகள் மீரா கல்லூரி செல்வதற்காக 50க்கும் மேல் ஷூக்கள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை அணியாமல் சென்றுவிட்டாள்.

அது எல்லாம் வீட்டில் தான் இருக்கிறது. அதனால் இனி நான் செருப்பு போடவே மாட்டேன் என விஜய் ஆண்டனி முடிவெடுத்துவிட்டார். மீராவுக்கு ஆசையாக ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். அதன் விலை 4 ஆயிரம் ரூபாய். தனது ரோலாக்ஸ் வாட்ச், விலை உயர்ந்த பிரேஸ்லெட் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு அந்த வாட்ச்சை மட்டும் விஜய் ஆண்டனி கட்டிக் கொண்டிருக்கிறார்’’ என பாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமாக கூறினார்