☰
×

விஜய் ஆண்டனி நடிப்பில் தந்தை, மகள் பாசப் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

 

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய மு.மாறன், தற்போது எழுதி இயக்கியுள்ள படம், ‘அப்பா குட்டி’. தந்தை, மகள் பாசத்தை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, மதன், சித்ரா லட்சுமணன், ஜா ரவி, முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிசி ஆண்டனி நடித்துள்ளனர். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் ஆண்டனி இசை அமைத்து எடிட்டிங் செய்துள்ளார். வரும் நவம்பர் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று, தீபாவளி கொண்டாட்டத்துக்கான அனுபவத்தை படம் வழங்கும் என்று கூறப்படுகிறது.