×

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘தமிழரசன்’... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'தமிழரசன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழரசன்’.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடிகள் குறித்த கதைக்களம் கொண்ட இப்படம் ஆக்‌ஷன் அதிரடியில் உருவாகியுள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 31-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த முறையாவது சொன்னபடி வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.