☰
×

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஹீரோவாகும் புது படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

 

தெலுங்கில் ஹிட்டான ‘கம்கம் கணேசா’ என்ற படம், தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இதை ஜே.ஜே மூவிஸ் சார்பில் விஜய் மாதவன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். தமிழ் உருவாக்க பணிகளை இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா மேற்கொண்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார்.

ஹீரோயின்களாக நயன் சாரிகா, பிரகதி ஸ்ரீவத்சவா, வில்லனாக ராஜ் அருண் நடித்துள்ளனர். உதய் பொம்மி செட்டி எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா ஒளிப்பதிவு செய்ய, சேத்தன் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். நிஜமான காதலுக்கும், ஃபேமிலி சென்டிமெண்டுக்கும், அதிரடி ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.