விஜய் தேவரகொண்டா மேடையில் ஆடிய நடனம் -எதனால் தெரியுமா ?
Sep 21, 2026, 08:00 IST
தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அவரது இளைய சகோதரர் ஆனந்த் தேவரகொண்டாவும் நடிகராக இருக்கிறார். ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘எபிக் : பர்ஸ்ட் செமஸ்டர்’ படம் வெளியாகியுள்ளது. ஆதித்யா ஹாசன் இயக்கியுள்ள இப்படத்தில் வைஷ்ணவி சைத்தன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது மைத்துனர் ஆனந்த் தேவரகொண்டாவுக்காக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார் ராஷ்மிகா மந்தனா. அதேபோல மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் தம்பிக்காக அண்ணன் விஜய் தேவரகொண்டா நேரில் கலந்து கொண்டார். மேலும், அந்நிகழ்ச்சி மேடையில் அப்படத்தின் ஹிட் பாடல்களுக்கு தனது தம்பி மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் சேர்ந்து நடனம் ஆடினார் விஜய் தேவரகொண்டா. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.