×

'ரெட்ரோ' ப்ரோமோஷன் விழாவில் விஜய் தேவரகொண்டா...!

 

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள 'ரெட்ரோ' ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்கவுள்ளார். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் 'ரெட்ரோ'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.