×

காதல் வாழ்க்கை குறித்து பகிர்ந்த விஜய் தேவரகொண்டா...

 
தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா முக்கிய இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. லைகர், தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இதுக்குறித்த ப்ரோமோஷன் ஈவண்டில் இவரது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் "எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக கூறினார். மேலும் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக் கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். என்னுடைய காதல் அன்கண்டிஷனலான காதல் கிடையாது. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன் தான் வரும்." என்றார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் டியர் காமரேட் திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சமீபத்தில் கூட இருவரும் குடும்பத்தினரும் ஒன்றாக தெலுங்கு திரையுலகின் ஆட வடிவமைப்பாளர் திருமணத்தில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். எனவே இவர்களின் காதல் உறுதியாகவே ரசிகர்கள் மத்தியில்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இருவர் தரப்பினரிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தற்பொழுது புஷ்பா 2, குபேரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.