×

இசையமைப்பாளர் அனிருத்-க்கு காதல் கடிதம் எழுதிய நடிகர் விஜய் தேவர்கொண்டா...

 

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள `கிங்டம்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அவருக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா  காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

விஜய் தேவரகொண்டா கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான HridayamLopala ப்ரோமோ வீடியோவை  படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்-க்கு நடிகர் விஜய் தேவரகொண்டா  காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.