×

 விஜய் தேவரகொண்டா நடிக்கும் புது படம் -யார் இயக்குனர் தெரியுமா ?

 
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். நானி, மிருணாள் தாக்கூர் நடித்த ‘ஹாய் நன்னா’ படத்தை இயக்கியவர்தான் சௌர்யுவ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் தீம் பாடலும் வெளியானது. அந்த பாடலானது, துவண்டுபோய் நாம் தடுக்கி விழுந்தாலும் மீண்டும் எழ வேண்டும் என்ற தன்னம்பிக்கை பாடலாக உருவாகியுள்ளது. இப்படத்துக்கு எழுத்து, இயக்கம் - சௌர்யுவ். ஒளிப்பதிவு - அலெக்சாண்டர் மார்ட்டினஸ். தயாரிப்பு வடிவமைப்பு - சுரேஷ் செல்வராஜன். வி எஃப் எக்ஸ் மேற்பார்வை - எரிக் டர்ஸ்ட். இசை - ஹேஷாம் அப்துல் வகாப். வைரா நிறுவனத்தின் மூலம் படம் உருவாகிறது.