×

‘விஜய்யின் தீவிர ரசிகர் போல’ – ‘லியோ’ FDFSல் காதலிக்கு தாலிகட்டிய ரசிகர்.

 

விஜய்யின் லியோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் செய்த செயல் நெகிழ வைத்துள்ளது.

தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் வெளியான படம் ‘லியோ’. த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வெளியான லியோ, ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை ‘லியோ’ பட FDFSல் தியேட்டரில் வைத்து கரம் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மஞ்சுளா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துள்ளார். அவரை லியோ பட வெளியீட்டு நாளில் திருமணம் முடித்துள்ளார். இது குறித்து கூறிய வெங்கடேஷ் தனக்கு தாய், தந்தை என யாரும் இல்லை என்றும் எல்லாமே விஜய் அண்ணாதான், அதனால் அவர் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது என்றும் கூறி நெகிழ வைத்துள்ளார்.