மீண்டும் ரீரிலீஸ் ஆகும் விஜய் படம் -எந்த படம் தெரியுமா ?
பி நாகிரெட்டியாரின் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
இயக்குநர் பரதன், விஜய்யுடன் இணைந்து இயக்கிய திரைப்படம் ‘பைரவா’.
இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’ படத்தை இப்போது SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.