×

G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் குறித்து தகவல் வெளியானது. இதில் G.O.A.T படத்தின் பட்ஜெட் ரூ. 333 கோடி என்றும், பிசினஸ் செய்யப்பட்டது ரூ. 416 கோடி என்றும், இதன்மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு தற்போது ரூ. 83 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படம் என்றாலே அதிகாலை சிறப்பு காட்சியை பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால் G.O.A.T படத்திற்கு காலை 9.00 மணி தான் முதல் ஷோ.

ஆனால், கேரளாவில் அதிகாலை 4.00 மணி காட்சி G.O.A.T படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எப்படி விஜய்யை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ, அதே போல் தான் கேரளாவிலும் அவர் பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனை கடந்த சில மாதங்களுக்கு G.O.A.T படத்தின் படப்பிடிப்பின் போது நாம் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.