×

சைக்கிளில் வாக்களிக்க வந்து கவனம் ஈர்த்த விஜய்!

நடிகர் விஜய் சைக்கிளில் பயணமாக வாக்களிக்கச் சென்றது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இன்று தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் காலையில் முதல் ஆளாக அவரவர் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குச் சாவடிகளுக்கு காலையிலே சென்று வாக்களித்துவிட்டனர். இதற்கிடையில் நடிகர் விஜய் வாக்களிக்க வரவில்லை என்று
 

நடிகர் விஜய் சைக்கிளில் பயணமாக வாக்களிக்கச் சென்றது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இன்று தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் காலையில் முதல் ஆளாக அவரவர் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குச் சாவடிகளுக்கு காலையிலே சென்று வாக்களித்துவிட்டனர்.

இதற்கிடையில் நடிகர் விஜய் வாக்களிக்க வரவில்லை என்று அனைவரும் எதிர்பார்த்த போது, நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் விஜய் சைக்கிளில் வாக்களிக்கச் சென்றுள்ளார். விஜய் சைக்கிளில் பயணமாக வாக்களிக்கச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். விஜய் சைக்கிளில் சென்றபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.