இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்.. என்ன காரணம் தெரியுமா ?
இந்திய ராணுவ வீரர்களை நடிகர் விஜய் திடீரென சந்தித்து உரையாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தளபதி விஜய் தற்போது 'தளபதி 69’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் என்பது தெரிந்தது.
ஏற்கனவே அவர் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் சமீபத்தில் நடந்த இந்த கட்சியின் மாநில மாநாடு மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் நேற்று இந்திய ராணுவ வீரர்களை சந்தித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு விஜய் நேற்று சென்றதாகவும் அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டதாகவும் அப்போது அவர் ராணுவ வீரர்களின் அனுபவங்களை கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.