கதாநாயகனாக களமிறங்கும் விஜய்சேதுபதியின் மகன்.
Nov 23, 2023, 19:45 IST
கூட்டத்தில் ஒருவனாக இருந்து இன்று தனக்கான ஒரு கூட்டத்தையே உருவாக்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து இன்று கதையின் நாயகனாக, குணசித்திர வேடம், வில்லன் என ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் வரை நடித்து அசத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் அவரது மகன் சூர்யா விஜய்சேதுபதி தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளாராம். படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தில் அவரது மகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.