×

இயக்குனர் அட்லி தயாரிக்கும் படத்தில் விஜய்  சேதுபதி -என்ன டைட்டில் தெரியுமா? 

 


இயக்குனர் அட்லி வழங்கும் ‘பத்தா’ படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இதில் லிஜோமோல் ஜோஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் மூலம் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் கவனித்துள்ளார். எடிட்டிங், கலைவாணன். ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின், அஜித் அந்தாரே இணைந்து தயாரித்துள்ளனர். அஷ்வின் முருகன், இணை தயாரிப்பு. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.