விஜய் சேதுபதி நடிக்க மிஸ் பண்ண அந்த வெற்றி படம் எது தெரியுமா ?
96 என்ற வெற்றி படத்தை எடுத்த இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் என்ற வெற்றி படத்தை எடுத்தார் .இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூலை வாரிக்குவித்து வெற்றி படமாக அமைந்தது .இந்த படத்தில் அரவிந்தசாமியும் ,கார்த்தியும் உறவினராக நடித்து அசத்தியிருப்பார்கள் .இப்படத்தில் ஊர் பாசத்தை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருப்பார்
மெய்யழகன் படத்தை, பிரேம் குமார் இயக்கியிருந்தார். இவர், இப்படத்தில் கார்த்தியை நடிக்க வைக்கும் முன்பு, அந்த கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகரைத்தான் கேட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
விஜய் சேதுபதியைதான், மெய்யழகன் படத்தில் நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார் பிரேம் குமார். ஆனால், அப்போது அவர் வேறு சில படங்களில் கமிட் ஆகி இருந்ததால், கால் ஷீட் பிரச்சனை வந்துள்ளது. எனவே, தன்னால் நடிக்க இயலாது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து கார்த்திக்கு இந்த வாய்ப்பு சென்றிருக்கிறது.
விஜய் சேதுபதி தற்போது தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி, மெய்யழகன் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவற விட்டது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், தான் மெய்யழகன் ஸ்கிரிப்டை படித்துவிட்டு அசந்து போனதாக கூறியிருக்கிறார்.