×

இயக்குனர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி -ஜோடி யார் தெரியுமா ?

 

நடிகர் விஜய்  சேதுபதி அடுத்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை சம்யுக்தா மற்றும் தபுவுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
புரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும்  படத்தில், மிகவும் வித்தியாசமான கேரக்டரில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தபு, துனியா விஜய் குமார் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகை சம்யுக்தா (மேனன்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சம்யுக்தா இதற்கு முன் தனுஷ் நடித்த வாத்தி மற்றும் விருபக்ஷா போன்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் கன்னட முன்னணி நடிகரான துனியா விஜய் மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியதை படக்குழு சில வாரங்களுக்கு முன் அறிவித்தது.இயக்குனர் பூரி ஜெகநாத் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். . இவர் இயக்கிய போக்கிரி, இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை ஈட்டியது குறிப்பிடத்தக்கது 
இது குறித்து விஜய் சேதுபதி  கூறுகையில், ‘படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. என் கேரக்டரை ஏற்று நடிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார். இம்மாத இறுதியில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்திற்கு புரி ஜெகன்நாத் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார்.