"பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தது டார்ச்சராக இருந்தது" -இப்படி சொன்னது எந்த நடிகர் தெரியுமா ?
பாண்டிராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். இவர் சசிகுமாரின் தயாரிப்பில் இவர் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார் பாண்டிராஜ்
பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ என்ற படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது
இப்படத்தின் அறிமுக விழாவில் விஜய் சேதுபதி பேசினார் .அவர் பேசியதாவது ,
"பாண்டிராஜூடன் பணியாற்றிய அனுபவம் கஷ்டமாக இருந்தாலும், டார்ச்சராக இருந்தாலும், தினமும் ஷூட்டிங்கை மிகவும் ரசித்தோம். இதில் நடித்திருக்கும் குழந்தை மகிழ், எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வம் மாதிரி. பாண்டிராஜ் நிறைய எழுதி வைத்திருக்கிறாரே… ஒரு வயது குழந்தை எப்படி நடிக்கும் என்று நாங்கள் யோசித்தோம். ஏற்கனவே ‘பசங்க’, ‘பசங்க 2’ ஆகிய படங்களை பாண்டிராஜ் இயக்கி இருந்தாலும், எங்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதெல்லாம் எதுவும் இல்லை என்று, மிகவும் அற்புதமாக நடித்தது அக்குழந்தை. ஒருகட்டத்தில் எங்களை அது நன்கு புரிந்துகொண்டது.
ஆனால், என்னை பார்த்தால் மட்டும் பயப்படும்.'என்று விஜய் சேதுபதி பேசினார் .
அவர் மேலும் பேசுகையில் அவருடன் இப்படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகை நித்தியாமேனனை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது .