☰
×

5 மொழிகளில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம்-என்ன படம் தெரியுமா ?

 

தெலுங்கு படவுலகை சேர்ந்த புரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சம்யுக்தா, தபு, ஜரினா வஹாப், துனியா விஜய், பிரம்ஹாஜீ, வி.டி.வி. கணேஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார். சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும் எடிட்டிங் பணிகளை சந்தோஷ் நூஜில்லாவும் கவனிக்கின்றனர்.

புரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.