×

விஜய் சேதுபதி,, விடிவி கணேஷ் நடிக்கும் பான் இந்தியா படம், -என்ன டைட்டில் தெரியுமா ?

 

விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன், துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் நடிக்கும் பான் இந்தியா படம், ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. சாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார். சந்தோஷ் நூஜில்லா எடிட்டிங் செய்ய, புரி கனெக்ட்ஸ் நிறுவனத்துக்காக புரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ்சுக்காக ஜே.பி.நாராயண ராவ் கொண்ட்ரோல்லா இணைந்து தயாரிக்கின்றனர். புரி ஜெகன்நாத் எழுதி இயக்குகிறார். இதில் கவுரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் கதாபாத்திரத்தை பற்றிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து, உடனடியாக நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.

உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும், தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ அறையும், கவுரி ஹெக்டே அதிகாரத்தை தேடுபவர் அல்ல; அதை கேட்பவர் என்பதை பிரதிபலிக்கிறது. ‘அச்சமற்ற பெண்’, ‘சக்தி வாய்ந்த அதிகாரி’, ‘இரக்கமற்றவர்’, ‘கருணையற்றவர்’, ‘துறையின் பிசாசு’ போன்ற வார்த்தைகள், அவரது கேரக்டரின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன.