×

விஜயின் செல்ஃபி, சூரரைப் போற்று ட்விட்டரில் நிகழ்த்தியுள்ள சாதனை!

விஜயின் நெய்வேலி செல்ஃபி, சூரரைப் போற்று திரைப்படம் ஆகியவை ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளன. நடிகர் விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, வருமான வரித்துறையினர் பிகில் பட சம்பளம் விவரம் தொடர்பாக விஜயை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக நெய்வேலியில் குவிந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் வேனின் மேல் ஏறி நின்றபடி ஆயிரக்கணக்காக ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
 

விஜயின் நெய்வேலி செல்ஃபி, சூரரைப் போற்று திரைப்படம் ஆகியவை ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளன.

நடிகர் விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, வருமான வரித்துறையினர் பிகில் பட சம்பளம் விவரம் தொடர்பாக விஜயை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக நெய்வேலியில் குவிந்தனர்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் வேனின் மேல் ஏறி நின்றபடி ஆயிரக்கணக்காக ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தற்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த செல்ஃபி இந்திய அளவில் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனை புரிந்துள்ளது. இதை ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பின்னர் விராட் தன் மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த ட்வீட் தான் இந்தியாவில் அதிக லைக்குகள் பெற்ற ட்வீட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் சுஷாந்த் சிங்க் ராஜ்புத்தின் ‘தில் பேச்சேரா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மகேஷ் பாபுவின் ‘சரிலேறு நீக்கவரு’ படம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.