×

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சார்ந்த வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பின்னர் “என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய்
 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சார்ந்த வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பின்னர் “என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்.” என்று முத்தையா அறிக்கை வெளியிட்டதை அடுத்து 800 படத்திலிருந்து தான் விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

தற்போது அவருக்கு பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் AMR ரமேஷ், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸ் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கதை தொடர்பான தகவல் திரட்ட அவர் பலமுறை இலங்கை சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே இந்திரா காந்தி கொலை மற்றும் வீரப்பன் வாழ்க்கை சார்ந்த படங்களை இயக்கியுள்ளார்.

Director AMR Ramesh

தற்போது AMR ரமேஷ் பிரபாகரன் வாழ்க்கை தொடர்பான வெப்சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிப்பதாக அறிவித்தால் அதற்கு மக்களிடம் இருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.