×

என்னுடைய படங்களை மக்கள் கலாய்ப்பது இயல்பு தான் - நடிகர் விஜய் சேதுபதி

 

சென்னையில் சர்வதேச சினிமா மற்றும் கலை நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, என்னுடைய படங்களை மக்கள் கலாய்த்தும் இருக்கிறார்கள், நன்றாக இருக்கும் படத்தை ரசித்தும் கொண்டாடியும் இருக்கிறார்கள், அது இயல்பு தான் என கூறியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள சர்வதேச சினிமா மற்றும் கலை நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் இயக்கும் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "இதன் பாடத் திட்டத்தை பார்த்தேன், கேட்டேன், வகுப்புகள் பிரமாதமாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கதைகள் சொல்லப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். என் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது பெருமகிழ்ச்சி.என்னுடைய படங்களை மக்கள் கலாய்த்தும் இருக்கிறார்கள், நன்றாக இருக்கும் படத்தை ரசித்தும் கொண்டாடியும் இருக்கிறார்கள். இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும், கடந்த 14 வருடங்களாக கலாய்ப்பதையும், பாராட்டுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அந்த அனுபவத்தில் சொல்கிறேன், அது இயல்பு தான்” என்றார்.