×

மாநகரம் இந்தி ரீமேக்கில் இணைந்த விஜய் சேதுபதி!

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். அந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே புலி, இருமுகன், சாமி 2 உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், சில மலையாளப் படங்களையும் தயாரித்துள்ளார். இந்த ரீமேக்கில் விக்ராந்த் மாசே ஒரு நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க
 

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். அந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே புலி, இருமுகன், சாமி 2 உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், சில மலையாளப் படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த ரீமேக்கில் விக்ராந்த் மாசே ஒரு நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க மும்பையிலேயே படமாக்கப்படும் வகையில் இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் தனது சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்கிறாராம். மூத்த பாலிவுட் நடிகர் சஞ்சய் மிஸ்ராவும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Vikrant Massey

மாநகரம் படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிகள் விவரங்களை படக்குழு இணைத்துள்ளனர். மேலும் கதை பாலிவுட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி, சந்தீப் கிஷான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படம் அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்குகிறது.