×

மூன்றாவதாக விஜய் சேதுபதியுடன் இணையும் வெற்றி இயக்குனர்!

தமிழ் சினிமாவின் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி. இவர் வழக்கமான கிளிஷே படங்களை எடுக்காமல் அவருக்கென்று தனி பாணி வைத்துள்ளார். அவர் எடுக்கும் படங்கள் நகைச்சுவை கலந்து நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் மக்களுக்கு பொட்டில் அடித்தால் போல் எடுத்துச் செல்பவை. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என்ற இரு படங்களில் நலன் குமாரசாமி விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணியாற்றினர். இந்த இரு படங்களும் மக்களிடையே வித்தியாசமான கதைக்களத்திற்காக நல்ல வரவேற்பு பெற்றது.
 

தமிழ் சினிமாவின் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி. இவர் வழக்கமான கிளிஷே படங்களை எடுக்காமல் அவருக்கென்று தனி பாணி வைத்துள்ளார். அவர் எடுக்கும் படங்கள் நகைச்சுவை கலந்து நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் மக்களுக்கு பொட்டில் அடித்தால் போல் எடுத்துச் செல்பவை.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என்ற இரு படங்களில் நலன் குமாரசாமி விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணியாற்றினர். இந்த இரு படங்களும் மக்களிடையே வித்தியாசமான கதைக்களத்திற்காக நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது நலன் குமாரசாமி விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நலன் குமாரசாமியும் இதை ஒரு நேர்காணலில் தெரியப் படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.