×

வெப் சீரிஸில் இணைந்து நடிக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்? 

 

நடிகர்கள் விஜய் சேதுபதி, மணிகண்டன் இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாகவும், இதனை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த தனது 50வது படமான மகாராஜா மெகா ஹிட்டானது. மேலும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நவரசா, இந்தியில் ஃபர்ஸி ஆகிய வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். தற்போது ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழில் பல படங்களுக்கு வசனம் எழுதி பின்னர் நடிகரானவர் மணிகண்டன். விஜய் சேதுபதி, மாதவன் நடித்து தமிழில் மிகவும் பிரபலமான திரைப்படமான விக்ரம் வேதா படத்திற்கு மணிகண்டன் வசனம் எழுதியுள்ளார். இதனைத்தொடர்ந்து மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் நடித்தார்.

இப்படத்தில் மணிகண்டன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் மணிகண்டன் நடித்த குட் நைட் (good night) திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. இளம் நடிகர்கள் வரிசையில் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகராக மாறிய மணிகண்டன் கடைசியாக நடித்த Lover திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது தமிழில் நடிகர் மணிகண்டனுடன் ஒரு வெப் சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரியஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த வெப் சீரியஸிற்கு முத்து என்கிற கட்டான் என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.முன்னதாக விஜய் சேதுபதி, மணிகண்டன் ஆகிய இருவரும் விக்ரம் வேதா, சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்டில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் இரண்டு நடிகர்கள் ஒரே வெப் சீரியஸில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.