×

பாலா சரவணனை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி...!

 

நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த அனைவரும் பெரும்பாலும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விஜய் சேதுபதி படத்தில் நடித்த நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து முத்தம் கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  படம் பார்த்த விஜய் சேதுபதி, நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

null