×

லாபம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு… உற்சாகத்தில் படக்குழு!

விஜய் சேதுபதி நடித்து வந்த ‘லாபம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வந்தார். டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அரசியல் களத்தில் படம் எடுப்பதில் ஜனநாதன் கைதேர்ந்தவர். லாபம் படத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியாக படத்தில் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி
 

விஜய் சேதுபதி நடித்து வந்த ‘லாபம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வந்தார். டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசியல் களத்தில் படம் எடுப்பதில் ஜனநாதன் கைதேர்ந்தவர். லாபம் படத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியாக படத்தில் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்தது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் முடிந்த உற்சாகத்தில் படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் சேதுபதி, இயக்குனர் ஜனநாதன், ரமேஷ் திலக், டேனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.