விஜய் சேதுபதி பட மேக்கிங் வீடியோ வெளியீடு
Oct 3, 2024, 16:30 IST
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியுள்ளார்.வசனங்கள் இல்லாத மவுன படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.