விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்...!
May 10, 2025, 11:55 IST
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி - ருக்மிணி வசந்த் நடித்துள்ள திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.