×

விஜய் சேதுபதி நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’... டிரெய்லர் குறித்த புதிய அப்டேட் 

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல்முறையாக இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ள இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.