×

பிரபாசுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி? 

 

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ”ஸ்பிரிட்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' ரூ.1,050 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் ’ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .’ஸ்பிரிட்’ பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்திப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபாசுக்கு வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.