×

பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!

 

பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.


இன்று உகாதி பண்டிகை முன்னிட்டு, பூரி ஜெகந்நாத் - விஜய் சேதுபதி கூட்டணி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. தற்போது இதில் விஜய் சேதுபதி உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.