×

விஜய் சேதுபதியின் மிரட்டலான லுக்… ‘லாபம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

விஜய் சேதுபதி தற்போது தமிழில் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். தமிழ் நடிகர் என்றில்லாமல் இப்போது தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜனநாதன் ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி லாபம் படத்திற்கான டப்பிங்கில் கலந்து கொண்ட
 

விஜய் சேதுபதி தற்போது தமிழில் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். தமிழ் நடிகர் என்றில்லாமல் இப்போது தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜனநாதன் ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி லாபம் படத்திற்கான டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. தற்போது படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லாபம் படத்தின் முதல் ட்ரைலர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். அத்துடன் விஜய் சேதுபதி மிரட்டலான லுக்கில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.