×

விஜய் சேதுபதியின் 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் 

 
விஜய் சேதுபதி நடித்துள்ள `ஏஸ்' படத்தின் ‘உருகுது உருகுது” பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
  
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர்  ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம்  ’ஏஸ்' . இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் யோகி பாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
 
விஜய் சேதுபதியின் 51-வது படமான ’ஏஸ்' இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், அண்மையில்  'உருகுது உருகுது' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையமைப்பில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.இந்நிலையில் 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.