×

வெளிநாட்டில் நடக்கும் ‘லியோ’ ஆடியோ வெளியீடு.. புதிய அப்டேட் 

 

‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ' . முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீர், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அனிரூத் இசையில் இப்படத்தின் ‘நா ரெடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் அக்டோபர் முதல் வாரம் துபாய் அல்லது மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் விஜய்க்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம் வெளிநாட்டில் ஆடியோ வெளியீட்டை வைத்தால் ‘லியோ’ படத்திற்கு நல்ல ப்ரோமோஷன் கிடைக்கும் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர்.