×

சுதந்திர தினத்தில் வெளியாகும் ‘லியோ‘ முக்கிய அப்டேட்.. தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல் !

 

சுதந்திர தினத்தன்று ‘லியோ’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடிகர் அர்ஜூன் பிறந்தநாளன்று அவரது கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களியே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் டீசரும் அதே தேதியில் வெளியாகும் என்ற மற்றொரு தகவலும் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.