×

லியோ-ல் இணைந்த நடிகர் நரேன்..  LCU-ல் உருவாகிறதா ? 

 

 விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பில் கடும் குளிரிலும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் நரேன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடித்த நரேன், அடுத்து கமலின் ‘விக்ரம்’ படத்திலும் நடித்தார். தற்போது லியோ-ல் நரேன் இணைந்துள்ளதால் இந்த படம் LCU-ல் உருவாவது உறுதியாகியுள்ளது.