×

விஜய்க்கு வில்லனாகும் டாப் ஹீரோ... 'தளபதி 67' அதிரும் அப்டேட் !

 

விஜய்யின் அடுத்த படத்தில் தமிழின் டாப் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 ‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்மின்,  மலையாள நடிகர் நிவின்‌‌ பாலி, உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதேபோன்று விஜய் மற்றும் விஷால் கூட்டணி இணைந்தால் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தின் பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படம் ‘கைதி’ பட பாணியில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் 40 வயதுடைய கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளாரார் என்பது குறிப்பிடத்தக்கது.