×

விஜய்க்கு ஜோடியாகிறாரா ப்ரியா பவானி சங்கர் ?... இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !

 

விஜய்யின் 68வது படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜய்யின் 68வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ‌‌‌‌‌‌‌‌‌நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.